Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு ரூ.4,000 நிதியுதவி…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம்தான் mission vatsalya திட்டம். தற்போது மத்திய அரசின் இந்த திட்டத்தில் செலுத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள், உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், சிறப்பு இல்லங்களின் கண்காணிப்பாளரால் பரிந்துரை செய்யப்படும் குழந்தைகள்,பெற்றோரால் கைவிடப்பட்ட பாதுகாவலர் பராமரிப்பில் உள்ள குழந்தைகள், விபத்தால் உடல் உறுப்பை இழந்து குழந்தைகள் போன்றோருக்கு இந்த திட்டம் உதவுகின்றது.

இவ்வாறு பல தரப்பிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின் படி 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மாதம் நான்காயிரம் ரூபாய் வீதம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகின் மூலம் நிதி ஆதரவு தொகை வழங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையினை பெறுவதற்கு ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாகவும், நகரப் பகுதிகளில் 36 ஆயிரம் ரூபாயிலிருந்து 96 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது .

இந்த வருமானத்திற்கு உட்பட்ட தகுதி வாய்ந்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சார்ந்தவர்கள் நிதி ஆதரவு தொகை பெறுவதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு 2818, வ உ சி நகர், விருதுநகர் 626003 என்ற முகவரியில் கிடைக்கும் விண்ணப்பங்களை பெற்று இதற்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கும் 04562-293946 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |