எஸ்பிஐ வங்கி வழங்கும் குழந்தைகளுக்கான இரண்டு சேமிப்பு திட்டங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏதாவது சேமித்து வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தங்களது பணத்தை ஒரு நல்ல முதலீட்டில் போட வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளுக்காக சேமிப்பு கணக்கு தொடங்க விரும்புவோருக்கு sbi வங்கி இரண்டு வகையான சேமிப்பு கணக்குகளை வழங்குகிறது. பெஹ்லா கதம் (Pehla Kadam), பெஹ்லி உடான் (Pehli Udaan) . இதில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு sbi அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த இரண்டு கணக்குகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக இந்த சேமிப்பு கணக்குகள் உதவுகிறது. இந்த இரண்டு சேமிப்பு கணக்குகளுக்கும் மினிமம் பேலன்ஸ் என்பது பராமரிக்க தேவையில்லை. சேமிப்பு கணக்குகளில் மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் உள்ளிட்ட நவீன வங்கி சேவை வசதிகளும் உள்ளது. இவை குழந்தைகளுக்கு சேமிப்பு உள்ளிட்ட தனிநபர் நிதி நிர்வாகம் போன்றவற்றை கற்றுத் தரும் வகையில் உருவாக்கப்பட்டது.
இரண்டு கணக்குகளிலும் 10 செக்கு அடங்கிய செக் புக் வழங்கப்படுகின்றது. மேலும் குழந்தைகளின் போட்டோ பதிக்கப்பட்ட ஏடிஎம் டெபிட் கார்டு வழங்கப்படும். இதை பயன்படுத்தி 5000 ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ள முடியும். மொபைல் பேங்கிங் வாயிலாக ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை எடுக்கலாம்.
பெஹ்லா கதம்: இந்த சேமிப்பு கணக்கு தொடங்க 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இணைந்து கணக்கு தொடங்க முடியும்.
பெஹ்லி உடான்: இந்த சேமிப்பு கணக்கில் 10 வயது முதல் 18 வயது வரையிலானவர்கள் கணக்கை தொடங்கலாம். பெற்றோர்கள் இல்லாமலே தனியாக கணக்கை பயன்படுத்த முடியும்.