மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சட்டம் கொண்டு வந்தது. அதோடு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வரிசையில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு சட்டம் பிறப்பித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட இந்த மோட்டார் சட்டம் அடுத்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.