பேருந்தில் பயணம்செய்த பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அவலூர்பேட்டையில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அன்பரசி. இவர் தனது குழந்தைகளுடன் தனியார் பேருந்து ஒன்றில் திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார் . அப்போது தன்னுடைய கைப்பைக்குள் 7 பவுன் தங்க நகையை வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் அவலூர்பேட்டை வந்ததும் அன்பரசியின் கைப்பையில் இருந்த நகைகள் திடீரென காணவில்லை. அதன் மதிப்பு 1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அன்பரசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.