குழந்தைகளுடன் காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள மத்திபட்டியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா என்ற மகளும், அன்புச்செல்வன் என்ற மக்களும் இருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நந்தினி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தைகளுடன் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு நந்தினி வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தைகளுடன் வெளியே சென்ற நந்தினி வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் நந்தினியின் உறவினர்கள் அவரையும், குழந்தைகளையும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர்கள் கிடைக்காததால் நந்தினியின் பெற்றோர் லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன நந்தினி மற்றும் குழந்தைகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.