Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழந்தைகளை அச்சுறுத்திய குரங்குகள்…. கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்….!!

அட்டகாசம் செய்த 40 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய உணவு கிடைக்காததால் குரங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. அந்த குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்து உணவு தின்பண்டங்களை எடுத்து செல்வதோடு குழந்தைகளையும் பயமுறுத்துகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அமைச்சர் மனோ தங்கராஜிடம் குரங்குகள் தொல்லை குறித்து தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அமைச்சர் மாவட்ட வனத்துறை அலுவலர் தொடர்பு கொண்டு குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு தெரிவித்துள்ளார். அதன்படி வனத்துறையினர் மூன்று அறைகளைக் கொண்ட பெரிய இரும்பு கூண்டை பத்மநாபபுரத்தில் வைத்தனர். கூண்டுக்குள் உணவும் வைக்கப்பட்டது. அதனை சாப்பிட வந்த 40 குரங்குகள் கூண்டுக்குள் சிக்கியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் கூண்டை வாகனத்தில் ஏற்றி குரங்குகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

Categories

Tech |