கொரோனாவால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் புதிய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கான தடுப்புமருந்து உருவாக்குவதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவிட் 19 புதுவிதமான வைரஸ் தொற்று என்பதால் இது குறித்து கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிட் 19 குறித்து புதிய ஆய்வு முடிவுகளை ஜெர்னல் சயின்ஸ் என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
அதில் குழந்தைகளிடம் இருக்கும் சாதாரண சளியை ஏற்படுத்தும் ஆன்ட்டிபயாட்டிக்குகள் கோவிட் 19 க்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது . இதனால்தான் குழந்தைகள் அந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான தெளிவான காரணங்களை கண்டுபிடிக்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளானது 2011 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சேமிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்க இது காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.