Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குழந்தைகளை அழைத்து சென்ற மனைவி… 8 வருடமா சொல்லலையே…? கதறும் கணவன்…!!

திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் ஆன நிலையில் பெண் தனது காதலனுடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தூரை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பஸ் ஓட்டுநராக கோயம்புத்தூரில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இவர் ரம்யா என்ற பெண்ணை எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மகாலிங்கம் வழக்கம்போல கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்று விட வீட்டில் இருந்த குழந்தையும் மனைவியும் காணவில்லை என்று உறவினர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர். இதனால் குடும்பத்தின் மீது அதிக அன்பும் கொண்ட மகாலிங்கம் பதறி அடித்துக்கொண்டு ஊருக்கு சென்று உள்ளார்.

அக்கம்பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்தபோது எந்த தகவலும் இல்லை. இதனால் மகாலிங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ரம்யா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது காதலனுடன் சென்றது தெரியவந்தது. இதனை அறிந்த மகாலிங்கம் 8 வருடமாக என்னுடன் வாழ்ந்த போது இது பற்றி ஒருநாளும் பேசவில்லையே? இத்தனை வருடங்களும் அவள் காதலன் நினைப்பதுதான் வாழ்ந்தாளா? என்று புலம்பிய மகாலிங்கம் தனது குழந்தைகள் மட்டும் திரும்ப என்னிடம் வந்து விட்டால் போதும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |