Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளை எப்படி பார்த்து கொள்வது என பார்ப்போம் …!!!

குழந்தைகளை எப்படி எல்லாம் வளர்ப்பது என இந்த தொகுப்பில் காணலாம் :

குழந்தைகள் நகம் கடித்தல், மூக்கினுள் கை விடுதல், நாக்கை கடித்தல் மேலும் சில குழந்தைகள் எச்சில் துப்புதல் போன்ற கெட்ட பழக்கங்களைக் கொண்டுள்ளார்கள். இந்த விஷயங்களைக் குழந்தைகள் மற்றவர்கள் முன்பு செய்யும் போது நம்மை மிகவும் வருத்தமாக  இருக்கும் .ஆனால் இதனை நீங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் முடியாத காரியம் அதனால் நீங்கள் பொறுமையாக  இருக்க வேண்டும் .

குழந்தைகளை தண்டித்தல் :

குழந்தைகள்  செய்யும் தவறுகளுக்கு அவர்களுக்குத் தண்டனை கொடுக்காதிங்க,அதன்மூலம் குழந்தைகளுக்குச் உங்களின் மேல்  வெறுப்பு  வற வைக்கும் . அத்துடன் அவர்கள் மூக்கினுள் கை விடுதல், நகம் கடித்தல் இது போன்ற செய்தால்  கண்டு கொள்ளாமல் சென்று விடுங்கள்.

பரிசு வழங்குங்கள் :

முதலில் குழந்தைகள் நல்ல விஷயங்களைச் செய்யும் போது பாராட்டுங்கள் அல்லது ஒரு சிறிய பரிசை கொடுங்கள்.

சொல்லிக்கொடுங்கள் :

குழந்தைகளிடம் முதலில் நீங்கள் தவறான விஷயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். அந்த விஷயத்தின் பின்னால் இருக்கும் ஆரோக்கியமற்ற கேடுகள் பற்றிக் கூறுங்கள்.

ஒன்று பின் ஒன்றாக சொல்லி கொடுங்கள் :

குழந்தைகள் நிறைய ஆரோக்கியமற்ற கெட்ட பழக்கங்களைக் கொண்டிருந்தால் அனைத்தையும் ஒன்றாகத் திருத்த முடியாது. எனவே நீங்கள் அவற்றை ஒன்று ஒன்றாகத் திருத்த முயற்சி செய்யுங்கள்.

Categories

Tech |