Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்…. தர்மபுரியில் பரபரப்பு சம்பவம்….!!

தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டபாவலி காட்டுக்கொட்டாய் பகுதியில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(27) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரசாத், என்ற மகனும், 6 மாதமுடைய லதா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் லட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது மாமனார் வீட்டிற்கு தான் செல்வார் என நினைத்து மணிகண்டன் அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்கள் லட்சுமி வரவில்லை என கூறியுள்ளனர். இதனால் மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைந்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றில் லட்சுமியும், 6 மாத குழந்தையும் சடலமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் லட்சுமி, 6மாத குழந்தை, பிரசாத் ஆகிய மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் மூன்று பேர் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் குடும்பத் தகராறில் லட்சுமி தனது இரண்டு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |