குழந்தைகளைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே அம்மன் கொல்லைமேட்டு பகுதியில் ஏழுமலை-கௌரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அருணா (3) என்ற மகளும் பூமிநாதன் (1) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கௌரி தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகள் 2 பேருக்கும் கௌரி விஷம் கொடுத்துள்ளார். அதன்பிறகு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனால் குழந்தைகள் 2 பேரும் கதறி அழுதுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்கோவிலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கௌரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.