நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்தெடுப்பது என்பது குற்றமாகும். ஆனாலும் பலர் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கின்றனர். இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை வாங்குவதும், விற்பதும் தெரிந்தால் அவர்கள் மீது இளைஞர் நீதி சட்டத்தின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் தம்பதிகள் WWW.CARA.nic in என்ற வெப்சைட்டில் பதிவு செய்யலாம். இதனையடுத்து யாராவது குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பாக தத்தெடுத்தால் 08286-233103 மற்றும் 9843150255 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் கொடுப்பவரின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.