பெங்களூருவில் குழந்தைகளைத் திருடி விற்று வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் காணாமல் போவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திவந்த விசாரணையில் 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த கும்பல் குழந்தைகள் இல்லாத தம்பதியிடம் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பின்னர் இவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து குழந்தைகளை திருடி அவர்களிடம் விற்று வந்துள்ளனர். இந்த கும்பலை சேர்ந்த ஐந்து பேர் மற்றும் அவர்களிடமிருந்து 13 குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.