Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை நான் பார்த்துகிறேன்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

5 மாத பெண் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை பேருந்து நிலையத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவி சங்கீதா மற்றும் 4 குழந்தைகளுடன் தங்கியிருந்துள்ளார். இவர் பழைய துணிகளை வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக மணிகண்டன் தனது குடும்பத்துடன் ஆனைமலை பேருந்து  நிலையத்தில் இருந்துள்ளார்கள். இதனையடுத்து மணிகண்டன் பண உதவி கேட்டு அருகில் இருப்பவர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது குழந்தைகளை சங்கீதா கவனித்து கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென அங்கு சென்ற மர்ம நபர் ஒருவர் சங்கீதாவின் கையில் பணத்தை கொடுத்து உணவு வாங்கி தருமாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் வரும் வரை உங்கள் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் எனவும் அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பிய சங்கீதா குழந்தைகளை அவரிடம் விட்டு கடைக்கு சென்றுள்ளார். அந்த சமயம் மர்ம நபர் 5 மாத பெண் குழந்தையை கடத்தி சென்றுவிட்டார். இதுகுறித்து சங்கீதா காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு போலீஸ் சூப்பிரண்டு செல்வரத்தினம் உத்தரவின்படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து அந்த  பெண் குழந்தையை  கடத்தி சென்ற மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |