தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்ததால், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பல பள்ளிகள் அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அதனால் தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு மேலும் பள்ளிகள் செயல்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.