தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ப்ளூ உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் குழந்தைகளிடம் அதிகளவில் பரவி வரும் தமிழக அரசு விடுமுறை அளிக்காமல் மெத்தனம் காட்டுகிறது.
இந்நிலையில், “டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பெரியவர்களை விட குழந்தைகளைத் தான் அதிகமாக தாக்குகிறது. காய்ச்சலை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால் நோய் பரவல் தடுக்கப்படும்” என்று எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் எழிலரசி எச்சரித்துள்ளார்.