இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி கிராமம் வடக்கு தெருவில் ஓட்டுனரான அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி(23) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வேலைக்கு சென்ற பிறகு பாரதி தனது இரண்டு மகன்களையும் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை அடுத்து பாரதி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறு காரணமாகவும், வயிற்று வலியால் அவதிப்பட்ட காரணத்தினாலும் பாரதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.