Categories
மாநில செய்திகள்

“குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது”…. பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உததரவு.!!

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

பள்ளி வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் : அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் ரிக்ஷாக்களில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள், ரிக்சாக்கள் மூலம் எவ்வாறு அனுப்புகின்றனர்? இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றன? என்று கேள்வியெழுப்பினர்.

மேலும் பள்ளி வாகனங்களுக்கு விதிமுறைகள் உள்ள நிலையில், ஆட்டோ, ரிக்ஷாக்களுக்கு என்ன விதிமுறை உள்ளது? இது மிக முக்கிய பிரச்சனை.. அனைத்து பள்ளிகளிலும் வாகன விதிகளை முறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், பள்ளி கல்வித்துறைக்கான அறிவுறுத்தலாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பள்ளி வாகனங்களில் விதிகளை முறையாக பின்பற்ற உயர் நீதிமன்றம் பிறப்பித்த அமல்படுத்த கோரிய வழக்கில் இந்த கருத்தினை நீதிபதிகள் முன் வைத்துள்ளார்கள்..

Categories

Tech |