தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல திட்டங்களை செயல்படுத்த கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை சார்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்புத்தொகை, பட்டப்படிப்பு வரை கல்விக்கட்டணம் போன்றவற்றை அரசே மேற்கொள்ளும் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இதன் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைவர் உட்பட 6 பேர் கொண்ட குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை செயல்படுத்த புதிய குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கான புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை வெளியிட தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.