பிரிட்டன் அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடா இருப்பதாக கூறிய செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நாடு ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற திட்டத்தை பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இதனால் பிரிட்டன் அரசு 6 முதல் 17 வயது வரை உள்ள 300 குழந்தைகளுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியினை செலுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வின் முடிவுகளை வரும் ஜூலை மாதத்தில் வெளியிட உள்ளதாகவும், மேலும் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே இங்கிலாந்து பப்ளிக் ஹெல்த் நிறுவனம் தொற்று நோய் பரவுவதில் குழந்தைகளுக்கு எந்த பங்கும் இல்லை, சுமார் 1513% பெரியவர்கள் பாதிக்கப்படும் நேரத்தில் 0.1% குழந்தைகள் பாதிப்புகுள்ளாவதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிப்பது குறித்து பெறும் சர்ச்சை எழுந்து வருகின்றது.