குழந்தைகள் உட்பட 50 பயணிகளுடன் மாயமான விமானத்தின் பாகங்கள் கடலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் Jagarta விலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகள் Ponitianak எந்த இடத்திற்கு SriWijaya Air flights போயிங் என்ற விமானத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விமானம், போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்பை இழந்துள்ளது. இதனையடுத்து ரேடாரிலிருந்து மாயமாகியுள்ளது. மேலும் விமானத்தில் 46 பெரியவர்கள், 7 குழந்தைகள் மற்றும் 3 கைக்குழந்தைகள் உட்பட ஆறு குழு உறுப்பினர்கள் இருந்துள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
https://twitter.com/breakingavnews/status/1347863350877839361
இதனைத்தொடர்ந்து தொடர்பை இழந்த விமானம் கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு குழுவினர் கப்பல் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். இதனையடுத்து மீட்புக்குழுவினர் Jagarta விரிகுடாவில் உள்ள விமானத்தின் பாகங்களை கண்டெடுத்துள்ளனர். இந்த மீட்பு குழுவினர் விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்த வீடியோக்கள் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் Jagarta விரிகுடாவில் விமானத்தில் பயணித்த பயணிகளை தேடும் பணி முடக்கிவிடப்பட்டிருப்பதாக மீட்பு குழு அதிகாரிகள் கூறியுள்ளனர்.