Categories
பல்சுவை

குழந்தைகள் கண்களை பராமரிப்பது எப்படி …?

குழந்தைகளின் கண்களை எப்படி பராமரிப்பது என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

1. குழந்தைகளின் கண்களுக்கு மைகளை தடவக்கூடாது. அது எப்போதும் பாதுகாப்பற்றது.

2. சில குழந்தைகள் அவர்களது கண்களை அதிகமாக கசக்குவதால் கண்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு செய்யாமல் நாம் தடுக்க வேண்டும்.

3. குழந்தைகளின் கண்களை வெதுவெதுப்பான நீரில் நன்றாக துடைத்துவிட வேண்டும்.

4. குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் பொழுது செல்போனில் தெரியும் வெளிச்சத்தை கண்களுக்கு அருகில் வைத்து பார்ப்பதை தடுக்க வேண்டும்.

5. அதேபோல் குறைந்தபட்சம் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை தடுக்க வேண்டும்.

6. குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது சன் கிளாஸ் பயன்படுத்த வேண்டும்.

7. உங்கள் குழந்தைகளின் கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வைட்டமின் A உணவு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

8. கீரை வகைகள், பப்பாளி, மாம்பழம், கேரட், ஆப்பிள், மீன் போன்ற உணவுகளில் வைட்டமின் A அதிகமாக உள்ளதால் இதனை பயன்படுத்துவது குழந்தைகளின் கண்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.

9. குழந்தைகள் அதிக நேரம் தூங்குவதால் குழந்தைகளின் கண்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. அவர்களின் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

10. குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுப்பதால் அவர்களின் உடல் ஆரோக்கியமாகவும், கண்கள் சீராகவும் இருக்கக்கூடும்.

Categories

Tech |