தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ‘குழந்தைகள் உதவி மைய நட்புறவு’ வாரமாக கடைபிடிக்கப்படும். அதன்படி நேற்று முன் தினம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தைகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது பணிகளுக்கிடையே குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிலைய மேலாளர் முருகன் கலந்து கொண்டார்.
அதன்பிறகு பேசிய அவர், குழந்தைகள் உதவி மையம் மூலம் 4,500 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். அதனைப்போலவே எழும்பூர் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை கோட்ட மேலாளர் கலந்து கொண்டார். அப்போது ரயில் பயணிகளிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே குழந்தைகள் உதவி உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.