குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் 20 லட்சம் மதிப்பிலான ஒலி-ஒளி கட்டமைப்பு, அகன்ற திரையுடன் கூடிய விழிப்புணர்வு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் நான்குபுறமும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனத்தின் சுற்றுப்பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை காணவும், அதனை பதிவு செய்யவும் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த து. மேலும் இந்த வாகனம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.