Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகள் மீது மை வைத்தார்களா…? அதிர்ச்சியில் பெற்றோர்… கடத்தல் கும்பல் குறித்து சர்ச்சை…!!

குழந்தை கடத்தல் கும்பல் சுற்றி திரிவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாக்கினாம்பட்டி, வைகை நகர் போன்ற பகுதியில் குடுகுடுப்பைக்காரன் போல் வேடம் அணிந்த ஒரு கும்பல் ஒன்று சென்றுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் மீது மை தடவை முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அச்சத்தில் குழந்தைகள் உடனடியாக வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளனர். அதன்பின் பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விட்டது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக நபர்கள் சுற்றுகின்றனரா என தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவகுமார் கூறும்போது, காவல் துறையினர் ஆய்வு செய்த போது குழந்தை கடத்தல் கும்பல் போன்ற நடமாட்டம் இல்லை எனவும், ஒருவேளை சந்தேகப்படும்படியான நபர்கள் அப்பகுதியில் இருந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர் கூறியுள்ளார். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |