இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் மூன்றாவது அலையானது குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஐந்து வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. 6 முதல் 11 வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் மருத்துவரின் கண்காணிப்பில் முகக்கவசம் அணிய லாம் என்று சுகாதார சேவைகள் இயக்குனரகம் ரிந்துரை செய்துள்ளது.
மேலும் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருந்து அளிக்கக்கூடாது. மிக அவசியம் என பட்சத்தில் மட்டுமே சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும். அறிகுறிகளற்ற, லேசான பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஸ்டெராய்டு மருந்துகளை கொடுப்பது ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளது.