Categories
தேசிய செய்திகள்

குழந்தைக்கு தடுப்பூசி போட வந்த பெண்…. செருப்பால் அடித்த செவிலியர்…. பகீர் சம்பவம்….!!!!

பீகார் மாநிலம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு குழந்தைக்கு பிசிஜி எனும் காசநோய் தடுப்பூசி போடுவதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் செவிலியர் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமென்றால் 500 ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் நான் ஏன் உங்களுக்கு தரவேண்டும்…? இது அரசு மருத்துவமனைதானே..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் செவிலியர் 500 ரூபாய் வாங்கவேண்டும் என்பதற்காக அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.. இதையடுத்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இதனைப் பார்த்த ஒருவர் இருவரையும் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். இந்நிலையில் செவிலியர் தன் காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து அந்தப் பெண்ணை தாக்கினார். அதன்பின் சுகாதார மையத்தில் இருவர் தலைமுடியை பிடித்து அடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்த பெண்ணும் அங்கன்வாடி சுகாதார ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலானதை அடுத்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |