ஸ்விட்சர்லாந்தில் பாஸல் பூங்காவில் 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அனுமதி வழங்கப்படாத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள பாஸல் உயிரியல் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இளம் தம்பதியினர் தங்கள் மூன்று மாத குழந்தையுடன் சென்றுள்ளனர். அப்போது மதியவேளையாகி விட்டதால் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்க்காக அங்கிருக்கும் உணவகத்தில் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.
அப்போது குழந்தையின் தந்தை உணவக உரிமையாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதாவது வெளியே கடும் குளிர் நிலவியதால் உணவகத்தில் தாய்ப்பால் கொடுக்க அனுமதி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ஹோட்டல் பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் கேட்டு கூறுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் சூழ்நிலையை கருதி அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் அந்த பெண் தனது குழந்தைக்கு கடுங்குளிரில் தாய்ப்பால் கொடுத்துள்ளார். ஆனால் பாஸல் பூங்காவில் தாய்ப்பால் அளிப்பதற்கான வசதிகள் உள்ளது. எனினும் தற்போது கொரோனா பரவல் காரணமாக அந்த வசதிகள் நடைமுறையில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அறிந்த பாஸல் பூங்காவின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது, எங்களின் பணியாளர்கள் தங்களின் கடமையைத்தான் செய்திருக்கிறார்கள். எனினும் இச்சம்பவத்தால் அந்த தம்பதிக்கு மனக்கசப்பு ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளது.