Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு பால் கொடுத்த தாய்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

மூச்சு திணறல் ஏற்பட்டு 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி நேருஜி தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தேவி நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் மணிகண்டன்-தேவி தம்பதியினர் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |