கோஷ்டி மோதல் தொடர்பாக 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விஜயபாலன் மீது மோதுவது போல சென்றுள்ளது. இதுகுறித்து விஜயபாலன் செல்வகுமாரிடம் தட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கோஷ்டி மோதலாக மாறியது. இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் சிறுவன் உள்பட 14 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.