பிரித்தானியா Staffordshire-ல் வசித்து வருபவர் ரிச் தாம்கின்சன் (48). இவருக்கும் ஈவி (29) என்ற பெண்ணுக்கும் சென்ற மாதம் திருமணம் நடந்தது. இருவரும் விடுதி ஒன்றில் சில வருடங்களுக்கு முன் சந்தித்து நட்பானார்கள். இருவருக்கும் இடையில் 19வயது வித்தியாசத்தை மீறி காதல் ஏற்பட்டது. இதையடுத்து திருமணத்துக்கு பிறகு ரிச் வேறு ஊரில் வசித்த தன் மாமனார், மாமியாரை சந்தித்தபோது அவர்கள் ஏற்கனவே ரிச்சை பல வருடங்களுக்கு முன் சந்தித்தை நினைவு கூர்ந்தனர். அப்போதுதான் 1990-களில் அவர்களுடன் சேர்த்து குழந்தையாக இருந்த தன் மனைவி ஈவியை சந்தித்து விளையாடியதையும் உணர்ந்து ரிச் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார்.
அப்போது குழந்தையாக பார்த்தவள் தன் மனைவியாக வந்தது ஆச்சரியம்தான் என ரிச் கூறுகிறார். அதனை தொடர்ந்து ரிச் கூறியதாவது, என்னையும், ஈவியையும் தந்தை – மகள் என பலரும் நினைத்து விடுகின்றனர். 19 வயது வித்தியாசம் தொடர்பாக நாங்கள் கவலைப்படவில்லை. அவளை மணந்ததுதான் என் வாழ்வில் சிறந்த நாள். இந்நேரத்தில் எங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கபோகிறது என்ற மகிழ்ச்சியான தகவலை கூறிகொள்கிறேன் என கூறினார். பின் ஈவி கூறியதாவது, ரிச்சின் வயது காரணமாக கர்ப்பம் தரிப்பதில் சிரமம் என்று கவலைப்பட்டோம். எனினும் தற்போது என் குழந்தையை எதிர்நோக்கியுள்ளேன். ஆகவே அற்புதமான மனிதர் என் கணவராக கிடைத்துள்ளார் என கூறியுள்ளார்.