Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தையின் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்”… இரண்டாவது திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை மேக்னாராஜ்…!!!!!

கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகையான மேக்னாராஜ். கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் ஏழாம் தேதி நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மகள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்கின்ற ஆண் குழந்தை இருக்கிறது. கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த நடிகை மேக்னா ராஜ் அதிலிருந்து மீண்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த சூழலில் 32 வயதான நடிகை மேக்னோராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மேக்னராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்து அவர் பேசியபோது மனது என்ன சொல்லும். எனது கணவர் இறந்த பின்பு என்னுடைய குழந்தையை வளர்ப்பது அவனது எதிர்காலம் பற்றி தான் சிந்தித்து வருகின்றேன் ஒரு சிலர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் தெரிவிக்கின்றார்கள். ஒரு சிலர் சிரஞ்சீவி சர்ஜாவின் நினைவில் வாழும் படி கூறுகின்றார்கள். எனது கணவர் எப்போதும் ஒன்றே சொல்வார் யார் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள் அதை கேட்க வேண்டும்.

ஆனால் இறுதியில் முடிவு எடுப்பது நாமாக தான் இருக்க வேண்டும் எனசொல்வார்.  தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் வருகின்ற நாட்களில் எனது மனது என்ன சொல்லும் என்பது தெரியவில்லை எனது எதிர்கால வாழ்க்கை பற்றி இறுதி முடிவு எடுக்கும் சக்தி எனக்கு இருக்கிறது. இரண்டாவது திருமண விவகாரத்தில் நான் என்ன முடிவு எடுத்தாலும் சிரஞ்சீவி என்னுடன் எப்போதும் இருப்பார் என்று நம்பிக்கை உள்ளது. அதனால் எல்லாவற்றையும் விட எனது குழந்தையின் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறேன். எனது மகனுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் அதுவே எனக்கு இருக்கும் ஆசை என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |