குழந்தையுடன் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் தினக்குடி பகுதியில் இளந்தமிழன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய வன்னிமலர் என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கோகிலா தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கோகிலா திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த இளந்தமிழன் தனது மனைவி மற்றும் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளார். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக இளந்தமிழன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.