Categories
தேசிய செய்திகள்

குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்…. கிடைத்த பரிசுத் தொகையை வைத்து செய்த செயல்…. என்ன செய்தார் தெரியுமா….?

ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து குழந்தையை காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மும்பை ரயில் நிலையத்தில் பார்வையற்ற தாயுடன் வந்த சிறுவன் ரயில் வரும் சில நிமிடங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் திடீரென தவறி விழுந்தான். அப்போது மகனை காணமல் தாய் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரயில் பணியாளர் மயூர்ஷெல்கே ஓடிவந்து சிறுவனை காப்பாற்றியுள்ளார். இந்நிலையில் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே சிறுவனின் உயிரை காப்பாற்றிய மயூர்ஷெல்கேக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் அவருக்கு 50,000 ரூபாயையும். ஒரு இரு சக்கர வாகனத்தையும் ஜாவா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிலையில் அவர் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் இருந்து ஒரு பகுதியை எடுத்து சிறுவனின் படிப்பு செலவிற்கு அளித்துள்ளார். மயூர்ஷெல்கே செய்த இந்த செயலால் அவர் மேலும் பாராட்டு பெற்று வருகிறார்.

Categories

Tech |