தாயே குழந்தையை கொன்ற குப்பை தொட்டியில் வீசிய கொடூர செயல் வெளியாகியுள்ளது.
பிரேசில் நாட்டில் தாயே தன் குழந்தையை உள்ளாடையால் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரோசியன் நாசிமென்டோ கொரியா. 20வயதான இவர் மன அழுத்தம் காரணமாக தன் குழந்தையை கொலை செய்து அந்தக் குழந்தையின் சடலத்தை 26வயதுடைய தன் காதலர் அன்டோனியோ கார்லோஸ் பாடிஸ்டா கான்ராடோ குப்பை போடும் கவரில் வைத்து தெருவில் போட்டுவிட்டு இருவருமாக ஒன்றும் தெரியாத மாதிரி வீட்டுக்குள் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
மறுநாள் குப்பை பொறுக்கும் தொழிலாளி கவரில் இருந்த குழந்தையை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், கொல்லப்பட்ட பெண் குழந்தை Corriea வுக்கு பிறந்தது இல்லை என்பதாலும் இந்த குழந்தையை கொலை செய்து குப்பைத்தொட்டியில் போட்டுள்ளனர். இதுதொடர்பாக குழந்தையை கொன்ற அந்த தம்பதியும் அதனை மறைக்க அவர்களுக்கு உதவியாக இருந்த Corriea வின் சகோதரர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.