குழந்தை இல்லாததால் 10 வயது சிறுவனைக் கொன்று, அவனது ரத்தத்தைக் குடித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள ரோசா நிலையத்திற்கு உட்பட்ட ஜமுகா கிராமத்தில் டிசம்பர் 5, 2017 அன்று இந்தக் கொடூரக் கொலை சம்பவம் நடந்தது. கொலை நடந்த மூன்றாவது நாளில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் அந்த இளம்பெண்ணுக்கு குழந்தை இல்லை. இதைத் தாங்க முடியாத இளம்பெண், தனது கணவர் மாதோதண்டாவைச் சேர்ந்த தர்மபாலை விட்டுவிட்டு ஷாஜகான்பூரில் உள்ள தனது முன்னாள் காதலன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்குதான் அந்த இளம்பெண் மந்திரவாதியை அணுகினார்.
33 வயதான பெண், கருத்தரிக்கத் தவறிய பின்னர், மந்திரவாதி ஒருவரைக் கலந்தாலோசித்து, குழந்தை இல்லாமையின் களங்கத்தை அகற்ற சடங்குகளைச் செய்ததாக போலீசாரிடம் கூறினார். ‘சிறுவனைக் கொன்று ரத்தத்தைக் குடித்தால் கருவுறும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்ததும் தெரியவந்தது. இந்த சடங்கின் ஒரு பகுதியாக, அந்த பெண் சிறுவனின் இரத்தத்தை குடித்து, அதை தன் முகத்தில் பூசினார் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது தன் தேவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.