பிரிட்டனில் கோமாவில் இருக்கும் இளம்பெண்ணை கருணை கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பிரிட்டனிலுள்ள 30 வயதான இளம்பெண் 32 வார கர்ப்பமாக இருந்த போது ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர ஏற்கனவே அடிசன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். கொரோனா உறுதியானதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது அவருக்கு ஏற்கனவே மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது .
இந்நிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோமாவில் இருப்பதால் நீதிபதி அவரை கருணை கொலை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளார். காணொளி மூலம் இந்த வழக்கை விசாரித்த ஹேடன், பெண் உயிர் காப்பாற்ற வாய்ப்பில்லை என்பதால் இலீசெஸ்டர் NHS அறக்கட்டளையின் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்கள் அந்த பெண் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை சட்டபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்புக்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களுக்கு உயிரை எடுப்பதும், உயிரை கொடுப்பதும் கடவுள் தான் என்று நம்புவதால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதி பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார். அவர்களின் குடும்பத்தினர் அப்பெண்ணை பார்த்துக் கொள்ள முடியும் என்றால் பலியேட்டிவ் கேர் சிகிச்சை திட்டம் அந்த நோயாளிக்கு தயாரிக்கப்பட்டு உள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.