Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குழந்தையை வீட்டிற்கு அனுப்ப சான்றிதழ்”லஞ்சம் வாங்கி தற்காலிக ஊழியர்கள்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

தற்காலிக ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தனலட்சுமி, சட்ட உதவியாளர் கார்த்தி ஆகியோர் தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இரண்டு பேரும் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை வீட்டிற்கு அனுப்ப அனுமதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 14-ஆம் தேதி தனலட்சுமி மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனலட்சுமி, கார்த்திக் இருவரையும் பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.

Categories

Tech |