தான் பெற்றெடுத்த குழந்தையை மூன்று லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டு பின்னர் பணம் திருடு போனதாக நாடகமாடிய தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த யாஸ்மின் என்ற பெண் தனது குடும்ப வறுமையை காரணம் காட்டி தனக்கு இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தையை இடைத்தரகர் மூலமாக சிவகுமார் ஸ்ரீதேவி தம்பதிக்கு 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் தனது குழந்தையை தன்னிடம் இருந்து வாங்கியவர்கள் ஆள் வைத்து பணத்தை திருடி விட்டதாக யாஸ்மின் புகார் அளித்துள்ளார்.
புகார் குறித்து விசாரணை செய்த போலீஸார் பணம் திருடு போனதாக யாஸ்மின் அளித்த புகார் முற்றிலும் பொய்யானது என்று தெரியவந்தது. குழந்தையை பிரிய மனம் இல்லாமல் இப்படி நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து குழந்தையை விற்ற யாஸ்மின் அவர்களிடம் இருந்து குழந்தையை வாங்கிய சிவகுமார் ஸ்ரீதேவி தம்பியையும், இடைத்தரகரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.