குழந்தை அய்யனார் ஆலய குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வலிவலம் வடக்குத் தெருவில் குழந்தை அய்யனார் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி நவக்கிரக ஹோமம், கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்க பூஜை மற்றும் தன பூஜைகள் நடைபெற்றுள்ளன. அதன்பின் லட்சுமி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி ஹோமம் நடைபெற்றுள்ளது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளன.
இதனையடுத்து 4-ஆம் கால யாகசாலை பூஜை மற்றும் கோமாதா பூஜை நடைபெற்றுள்ளது. பின்னர் குழந்தை அய்யனார் ஆலயத்திலுள்ள விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றுள்ளனர்.