தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைத்தள கணக்குகளை பயன்படுத்தி வருகின்றன. அதில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனி கணக்குகள் உள்ளது. ஆனால் அதில் இருக்கும் சில ஆபத்துகள் யாரும் அறிவதில்லை. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் டுவிட்டர் வலைத்தளத்தில் குழந்தை ஆபாச வீடியோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக குழந்தைகள் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய ஆணையம் சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் ட்விட்டர் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.