பாலில் உள்ள சத்துக்களை விட அதிக அளவில் தேங்காய் பாலில் உள்ளது. அதனால் தேங்காயை சிறுதுண்டுகளாக வெட்டி, மென்று சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, அவர்கள் விளையாடி கொண்டிருக்கும் போது அருகில் குப்பைகளை பெருக்குவதை நாம் தவிர்த்தால் தான் தூசியினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து, தற்காத்து கொள்ள முடியும் .
டெட்டால் அல்லது பினாயில் பாட்டிலை வைத்து சிறுக்குழந்தைகள் இருக்கும் இடங்களில் வாந்தி அல்லது அதிகமாக சிறுநீர் போயிருந்தால், அடிக்கடி அதனை கொண்டு கழுவியோ அல்லது துடைத்தோ வந்தால் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
மலச்சிக்கலால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு நிவாரணமாக பசலைக் கீரையை எடுத்துப் பொடியாக நறுக்கி , வேக வைத்து சாப்பாட்டுடன் கொடுத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளுடன் செல்லும் போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச் சென்று அவர்களுக்கு சாப்பிட கொடுப்பதால் உணவு உண்ணாமல் தூங்குவதை தவிர்க்கலாம்
கூல் டிரிங்ஸ் போன்ற குளிர் பானங்கள் குடிப்பதால் குழந்தைகளுக்கு பாஸ்பேட், கால்சியம் போன்ற ஊட்டசத்தை குறைக்க உதவுவது. மேலும் உடல் ஜீரண சக்தியை குறைத்து அல்சர் போன்ற பிரச்சினைகளை உருவாக்கிறது.
குழந்தைகளின் வளர்ச்சியை சீராக பராமரிக்க பாலில் தேனை கலந்து குடித்து வரலாம். இது உடலின் வளர்ச்சியை சீராக வைக்க உதவும்.
குழந்தை, இரவு அல்லது பகலில் தூங்குகின்ற நேரத்தில் ஈக்கள், கொசுக்கள் கடிப்பதனால் தூங்குவதற்கு தொல்லை இருந்தால் படுக்கையைச் சுற்றி, குழந்தை வளர்ப்பான் ஆன வசம்பு, சிறிது புதினா இலைகளைக் கசக்கிப் வைத்தால் கொசுக்கள் வராது.
குழந்தைகளின் மனோபலம், மூளை பலப்பட வேண்டுமென்றால் இரவு நேரங்களில் சிறிது பேரீச்சம்பழத்தை கொடுத்து, அதனுடன் பால் அல்லது தண்ணீரை குடிக்க வைக்கலாம்.
குழந்தைகளுக்கு கைகளை சோப்பினால் கழுவிய பின்னர், எளிதாகவும், சுத்தமாகவும் நகங்களை வெட்டி கொள்ளலாம்.
வீட்டில் செல்ல பிராணிகளைவளர்க்கிறீர்களா? அப்பாடியானால் எளிதில் குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைகளில் புண் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கு காதில் சீழ் வடிந்தால் உடனே மருத்துவ ஆலோசனை செய்யாவிட்டால் சீழ் வடிதல், அவர்களின் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்க கூடும்.