Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பாவடி தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 2-ஆம் தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஈஸ்வரி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துகொண்டுள்ளார்.

இதனைதொடர்ந்து ஈஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஈஸ்வரியை மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |