காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பொத்தரை கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு சங்கர் தரணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் சங்கர், அவரது தாய், தந்தை ஆகியோர் தரணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை வாங்கி வருமாறு அவர்கள் தரணியை துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தரணி மடியில் கல்லை கட்டிக்கொண்டு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் பெண்ணின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் சங்கர், அவரது தாய், தந்தை ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.