Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இல்லை” பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பெற்றோர் கண்ட காட்சி…!!

குழந்தை இல்லை என்று பெண்ணை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பீகாரை சேர்ந்த அல்பனா என்ற பெண்ணிற்கும் கவுரவ் என்பவருக்கும் 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆன நிலையில் அல்பனா குழந்தை பெறவில்லை என்பதால் கவுரவ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். அதோடு அதிக வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

அல்பனா தனது கணவர் மற்றும் குடும்பத்தார் கொடுமை படுத்துவதாகவும் கொன்றுவிடுவார்கள் என்று பயமா இருப்பதாகவும் கூறி அழுதுள்ளார். இதனால் மகளைப் பார்க்க பெற்றோர்கள் அவர் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அந்த குடும்பம் அவர்களை வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை. இவர்கள் கெஞ்சி கேட்ட பிறகு வீட்டினுள் அனுமதித்தனர். ஆனால் வீட்டிற்குள் சென்ற போது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டு அறையில் அல்பனா தீயில் கருகி சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த அவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில் அல்பனா பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப் பட்டது தெரியவந்ததையடுத்து அல்பனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |