Categories
உலக செய்திகள்

“குழந்தை இல்லை” மருத்துவரிடம் சென்ற தம்பதி…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சீனாவில் ஒரு வருடமாக கருத்தரிக்க முயற்சி செய்து வந்த பெண்ணுக்கு  உட்சுரப்பியல் நிபுணர்கள் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளனர்.

சீனாவைச் சேர்ந்தவர் பிங்க்பிங். இவர் மற்றவர்களைவிட வளர்ச்சி குறைவாக இருந்ததால் பிங்க்பிங் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தாயார் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பிங்க்பிங்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாளடைவில் இந்தப் பிரச்சினை சரியாகி விடும் என்று கூறியுள்ளனர்.  இந்நிலையில் சமீபத்தில் பிங்க்பிங் தனது கணுக்காலில் அடிபட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய காலிற்கு  எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் சிறுவயதில் இருந்தே தங்களது எலும்புகள் சரியாக வளர்ச்சியடையாமல் இருக்கின்றது என்று கூறியுள்ளனர்.

இதனால்  பிங்பிங்கும் அவரது கணவரும் உட்சுரப்பியல் நிபுணர்களிடம் சென்று தாங்கள் ஒரு வருடமாக கருத்தரிக்க முயற்சி செய்து வருவதாகவும், இந்த எலும்பு வளர்ச்சி பிரச்சனைக்கும் கருத்தரிப்பிற்கும் ஏதாவது காரணம் உண்டா? என்று கேட்டுள்ளனர். இதனால் உட்சுரப்பியல் நிபுணர்கள் பிங்க்பிங்கிற்கு மரபணு சோதனை செய்துள்ளனர். அதில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைந்து இருப்பதுதான் எலும்பு பிரச்சனைக்கு காரணம் என்றும், இது பிறவி அட்ரினல் ஹைபர் பிளாசியா என்னும் நோயின் அறிகுறியாகும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனையில் ஆண்களுக்கு இருக்கும் கரியோடைப் 46 எக்ஸ் – ஒய் இருப்பதை கண்டுபிடித்துள்ள அவர்கள் பிங்க்பிங் பிறப்பால் ஒரு ஆண் என்றும், அவருக்கு கருப்பைகள் இல்லை என்றும், ஆனால் ஆண்ணுறுப்பிற்கு பதிலாக பெண்ணுறுப்பு இருக்கின்றது என்றும் அதிர்ச்சியளிக்கும் தகவலை உட்சுரப்பியல் நிபுணர்கள் அவர்களிடம் கூறியுள்ளனர்.

Categories

Tech |