Categories
டெக்னாலஜி பல்சுவை

குழந்தை ஏன் அழுகுது..? என்ன மனநிலை….? தெரிஞ்சிக்கணும்னா இத வாங்குங்க…!!

குழந்தைகளை பாதுகாக்கும் புதுவித தொழில் நுட்பத்துடன் கூடிய கேமரா ஒன்றை ஹீரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் பொருளாதார சுமையை குறைப்பதற்காக வீட்டில் ஆண், பெண் என இருபாலரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பெண்கள் கர்ப்ப காலத்திலும் குழந்தை பெற்று ஓரிரு வருடங்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்தாலும், சிறுசிறு வருமானத்திற்காக வீட்டிலிருந்தபடியே பார்க்கும்படியான வேலைகளை தேர்வு செய்து வருகிறார்கள்.

இதன் காரணமாக, அவர்களது குழந்தைகள் மீது அவர்களுக்கு சரியான கவனம் என்பதே இல்லை. தற்போது இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்காக, ஹீரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கொண்டு கியூபோ பேபி கேம் என்ற கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் குழந்தையை எங்கிருந்தும் கண்காணிக்க முடியும். குழந்தை அழுதாலோ, பாதுகாப்பான இடத்தை விட்டு நகர்ந்தாலோ எச்சரிக்கை செய்தியை போனுக்கு அனுப்பும். மேலும், குழந்தைகளின் அன்றாட நடவடிக்கை மன நிலை என்ன? என்ற டேட்டாவையும் வழங்கும்.

இதன் விலை, ரூபாய் 7,490 ஆகும். இந்தியாவைப் பொருத்தவரையில், பெண்கள் தங்களது குழந்தைகளை கண்மணிபோல் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள். ஆகையால் அவர்களுக்கு இந்த கேமரா பெரிதும் பயன்படுமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. 

Categories

Tech |