Categories
தேசிய செய்திகள்

குழந்தை கேட்ட காதலி…. பிறந்து 1 மாதம் ஆன பேத்தியை கடத்தி வந்து பரிசளித்த நபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தனது காதலி கேட்டார் என்பதற்காக ஒருமாத பேத்தியை கடத்திச் சென்ற 56 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 56 வயதான முகமது ஜாபர். இவர் 40 வயதான பக்கத்து வீட்டுக்கார பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவருக்கு குழந்தை இல்லாததால் காதலி சமீபத்தில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை பட்டுள்ளார். இதனை தனது காதலனிடமும் பகிர்ந்துள்ளார். இதனால் முகமது ஜாபர் தனது மகளின் குழந்தையை கடத்தி தனது காதலிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

கடத்தப்பட்ட சிறுமி மகளுக்கு நான்காவது குழந்தை, நான்காவது குழந்தை பிறந்த பிறகு ஜாபர் தனது மகளிடம் சென்று நான்கு குழந்தைகளில் ஒன்றை தர முடியுமா? என்று கேட்டுள்ளார். ஆனால் மகள் மற்றும் மருமகன் மறுத்ததை தொடர்ந்து, ஒரு மாத சிறுமியை கடத்த முடிவு செய்தார். ஏப்ரல் 20ஆம் தேதி இரவு தனது மகள் வீட்டிற்கு வந்து அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். மறுநாள் காலை வீட்டில் இருந்து குழந்தை காணாமல் போனதால் பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரணை செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மகளின் தந்தையான முகமது ஜாபர் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் குழந்தையுடன் முகமது ஜாபரின் காதலியும் அவரது கணவரும் சொந்த ஊரான பீகாருக்கு சென்று விட்டனர். பின்னர் அந்தத் தம்பதியை கைது செய்து குழந்தையை மீட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |