குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், இதற்கு ஒரு முடிவு கட்டஒரு புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என திரிஷா வலியுறுத்தியுள்ளார்.
நடிகை த்ரிஷா அவர்கள் யுனிசெப் அமைப்பில் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக இருக்கிறர். இவர், குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை பற்றிய இணையதளம் மூலமாக யுனிசெப் களப்பணி ஆளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, கொரோன வைரஸ் பரவி வரும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை தைரியமாக மேற்கொண்ட பணியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறிய திரிஷா,
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும், தொன்றுதொட்ட கலாச்சாரமாக இருந்து வருகின்ற குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி, ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கு புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என திரிஷா தெரிவித்தார்.