Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை திருமணம் பற்றி தெரிந்தால்…. உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்…. மாணவர்களுக்கு விழிப்புணர்வு….!!

குழந்தை திருமணம் மற்றும் போதை பொருள் தடுப்பு ஆகியவை குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சி.பி.யு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறையினர் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போதைப்பொருள் தடுப்பு, குழந்தை திருமணம் ஆகியவை குறித்த விழிப்புணர்ச்சி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் துணை சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாணவர்களிடம் பேசிய அவர் போதைப் பழக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கூடாது, உங்கள் நண்பர்கள் அல்லது சக மாணவர்கள் யாரேனும் போதை பழக்கத்திற்கு ஈடுபட்டிருந்தால் உடனடியாக ஆசிரியர் அல்லது பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.

சாலை விதிகளை மதிக்க வேண்டும், பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய கூடாது, குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும். மேலும் உங்களுடன் படிக்கும் சக மாணவ மாணவிகளோ, உறவினர்களோ, தெரிந்தவர்கள் என 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு திருமணம் செய்வது தெரிந்தால் உடனடியாக சைல்டு லைன் அமைப்பினருக்கு அல்லது காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் லாவண்யா, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானபண்டித நேரு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |